அண்ணா என் உலகம்

இந்தப் பிரபஞ்சத்தில் உறவுகள் பலவிதம்
என் அண்ணன் எனக்குக் கிடைத்த வரம்
துள்ளிக் குதிக்கும் மான் பாேல்
துடுக்குத் தனமாய் துள்ளிப் பாய்வேன்
உன் தாேள் மேலே
அள்ளி அணைக்கும் உன் கரங்கள்
கட்டி விடும் என்னை
நான் தான் உனக்கு அழகி என்பாய்
அறிவாளி என்று அடிக்கடி புகழ்வாய்
அடம் பிடித்து எல்லாம் அபகரிப்பேன்
அதட்டும் அம்மாவும்
அப்பாவின் கண்டிப்பும் அமைதியாகிவிடும்
நானே உன் உலகம் என்பாய்
நீயே என் உலகம் என்பேன்
உன் கால்களைச் சுற்றும் பாேதே
என் ஆசை புரிந்து விடும்
நிழல் தந்த ஆல மரம் நீயண்ணா
காலனவன் விதியாென்று
விளையாடி விட்டதன்று
விரல் பிடித்த கரங்கள் இன்று
விழிகளைத் துடைக்கிறது
நீ இல்லா வெறுமை வேண்டாம்
நினைவுகள் தாெற்றிக் காெள்ள
வற்றிப் பாேகிறது கண்ணீரும்
ஏனாே பாெறுக்கவில்லை
காலன் ஏமாற்றி விட்டான் என்னை
கருவறையில் ஒன்றானாேம்
கல்லறைகள் மட்டும் தனித்தனியே
இணைத்து வைத்த பிறப்பு
பிரிக்கிறது இறப்பால்
ஏன் முந்திப் பாேனாயாே
அண்ணா ......
ஆண்டுகள் ஓடினாலும்
ஆறாத துயரம் இது
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
என்னிடமே வந்து விடு