அவள்- ஏழு நாட்கள்
அந்த ஏழு நாட்கள்
முதல் நாள் அவளை பார்த்த போது படபடப்பு
இரண்டாம் நாள் பார்ப்போமா என்ற பரபரப்பு
மூன்றாம் நாள் வராததால் கடுகடுப்பு
நான்காம் நாள் அவளை புறக்கணிப்பு
ஐந்தாம் நாள் அவளை பார்க்க மனம் தொணதொணப்பு
ஆறாம் நாள் அவளை பார்த்ததால் ஆர்ப்பரிப்பு
ஏழாம் நாள் அவள் பேசியதால் என்னில் புன்சிரிப்பு
இனி என்றுமே என்வாழ்வில் கலகலப்பு

