விழிப்புணர்வு
இளம்பிள்ளை வாதம் (போலியோ)
விழிப்புணர்வு.
கறுத்த முகம்,
வெளுத்த விழியோரம் வறுமையின்
சுவடுகள்,
சீருடை பொத்தானெல்லாம்
இடம் மாறியிருக்க,
அந்த பிஞ்சு கால்கள் நஞ்சாய் செயலிழக்க,
ஊன்றுகோல் துணையோடு,
விழிப்புணர்வு புகைப்படத்திற்கு
பதிவு செய்திருக்கிறது, அந்த
பிள்ளை நிலா .
" இந்த நிலை நம் பிள்ளைக்கு வர வேண்டாம்" என்று உரைக்கிறது அந்த
விழிப்புணர்வு வாசக பலகை .
சுயநலத்தின் உச்ச நிலை!
இதயம் கனக்கிறது!
எத்தனை வன்மம்
இந்த
சமூகத்திற்கு!!!
"இந்த நிலை எந்த பிள்ளைக்கும்
வர வேண்டாம்"
என்று அல்லவா பறைசாற்றியிருக்க
வேண்டும்?