காதல் குரல்ள்
அரவு தீண்டியவன் கூட உயிர் பிழைக்கலாம்,காதல்
உறவு தீண்டியவன் பிழைத்தலரிது!🌸
பேருந்தும்,சிற்றுந்தும்,வானூர்தியும் ,பயண சுகமென்பார்,தன் காதலியின் மன ஊர்தியில் பயணம்
செய்யாதோர்!🌸
ஒரு நாள் கடலலை கூட ஓயலாம்! உனை நினைக்கும்
எண்ண அலைகள் ஓயாது!🌸
நிலவைப் பார்த்தால் பாட்டி வடை சுட்ட கதையா
தெரிகிறது? நீ என் இதயம் சுட்ட(திருடிய)நிகழ்வல்லவா
தெரிகிறது!