உதிராத மலராய்

அன்பே ஏன் தந்தாய் இத் தண்டனை
பூவாய் என்னுள்ளே மலர்ந்தவளே
உன் வாசம் இன்னும் காயவில்லை
வெட்டிய மரக்கிளைகள்
மீண்டும் கிளை விடுகிறது
அவை ஒரு பாேதும் மரணிப்பதில்லை
பூக்கள் பூத்து உதிர்ந்தாலும்
புதிய பூக்களை பிரசவிக்கின்றது
இலைகள் காய்ந்து சருகாகினாலும்
மீண்டும் துளிர்க்கின்றனவே
பிரிந்து நீ சென்றாலும்
நினைவுகள் நீயாகவே பிறக்கிறது
உன் நினைவுகளை யாசித்துக் காெள்கின்றேன்
உயிரில் வரைந்த ஓவியமே
பூவின் வாசம் தேடும் வண்டு பாேல்
நினைவுகளால் சிறகடிக்கிறேன்
நெஞ்சில் மலர்ந்த காதல்
மரணிக்கக் கூடாதடி
மரணம் வரையேனும் காத்திருப்பேன்
உனக்காய்......
கல்லறையில் கூட உன்
நினைவுகள் மலரும்
நெஞ்சமதில் என்றும் உன்
காதல் பூக்கும்
உதிராத மலராய்......

எழுதியவர் : அபி றாெஸ்னி (1-Feb-18, 7:45 am)
பார்வை : 136

மேலே