தமிழன் நிலை

சோழர் புலிவேந்தன் பாய்ந்து நிற்க
சேரக் குன்றில் சிற்றனை அனைத்து
குமரிக்கண்டத்தில் தமிழ்தாய் போற்றி
வளர்த்த தமிழினமே

காற்று புகாத தேசத்திலும் உன்
புகழ்கொடி பறந்ததே
இன்று காற்றளவும் தமிழ்
வாசம் மணக்க தவிக்கிறதே

வீறுகொண்டு எழுந்த மீசையடா
வெள்ளையனுக்கு விடைகொடுக்காத வீரபாண்டியனடா
தேசம் புகுந்த வேற்றினமே
வேரோடு சாய்ப்பான் என கனவிலும் எண்ணியதில்லை

சங்கம் கொண்ட சரித்திரம்
சரியத் தொடங்கிய நாள்முதல்
கால் பதித்த இடமெல்லாம்
காலத்தில் கரைந்தே போனதே

எழுதியவர் : ப.இளவரசன் (2-Feb-18, 7:37 am)
Tanglish : thamizhan nilai
பார்வை : 259

மேலே