தமிழ்நாட்டை முதலில் கண்டதார்

(ஆசிரியப்பா)
தமிழ்மூ வேந்தரும் முன்கண் டாறிலை
தமிழ் நாடைஎவர் முன்கண் டார்கேள்
என்றுமி லாத்திரா விடத்தைப் பெரியார்
அண்ணா அண்ணாந் துபார்க்க விட்டார்
தண்தமிழ் கோட்டையை அகத்தியர் சொன்னார்
அன்றேச் செந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ்
கண்டிடு வாகடத் தில்நீ
தண்தமி ழிலெத்தனை எத்தனைக் இலக்கியமோ!

சிலம்புடன் சிந்தா மணிமே கலையும்
குண்டல கேசிவ ளையா பதியும்
பெரியபு ராணம் பதினெண் கீழ்கணக்கு
பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
திருவா சகம்தே வாரத் திருக்குறள்
பெருஞ்சித் துபதினெண் பெருவா கடங்கள்
பெருஞ் சரித்திரங் கள்நைநி டதங்கள்
வெண்பா நன்பா வலராம் புகழேந்தி
பரணிக் கோர்ஜெயங் கொண்டான் கலம்பக
இரட்டையர் உலாவின் ஒட்டக் கூத்தன்
இராமா யணமகா பாரதம் திருப்புகழ்
இராமலிங் கனார்பட் டினத்தார் அருணகிரி
எண்ணிலாக் கற்றார் எவராம்
ஒன்றிரண் டுளறல் அவர்மே தையாமோ!

பலதுங் கற்றார் போல்சட சடவென
படபட வெனமடை போலொப் பிப்பார்
பலகூட் டங்களில் அதைஒப் பிப்பார்
பரணிப் புறநா நூற்றில் நாற்பதும்
தரணியில் கவிஞனோ புலவனோ இல்லை
ஒளவையின் ஞானக் குறள்படி யாதான்
ஒன்பது குறளில் தாள்வணங் கென்றான்
வள்ளுவன் உருவமுள் ளதைத்தான் சொன்னான்
வள்ளுவன் கடவுள் வாழ்த்தில் தாள்அடி
வணங்கென சிவனைச் சொல்லா தாரை
வணங்கச் சொன்னான் காலுள்ளச் சாமிதான்
வேண்டியர் வேண்டார் சிவனுக் கில்லையே
கேட்டதை கொடுக்கஏ வலாளாக் கடவுள்
வள்ளுவ னின்பூ நூல்கழற் றியங்கே
வஸ்த்திரம் அணிவித் தபாவி யாரோ
வள்ளுவன் முன்ஓ வியப்பூ நூல்பார்
வள்ளுவ னைத்தொலைத் தபாவிகள்
வேண்டுதல் வேண்டா இலாதவன் சிவன்ஒன்றே!

எல்லாக் கல்விக் கும்தாய் சரஸ்வதி
கால்சிலம் பைக்கம் பன்சரஸ் வதியிடம்
கடன்வாங் கியதால் திரும்பக் கேட்டாள்
கடவுளை மறைக்க தமிழரேச் செய்சதி
கர்ணப ரம்பரைச் செய்தியாம் கால்சிலம்பு
கம்பன் மொழிக்குத் தாயாம் சரஸ்வதி
காளிதா சவள்ளுவர்க் கும்தாய் அவளே
கடன்கா ரரழித் தார்கடவுள் பக்தியை
இலங்கைச் சுந்திரம் இயற்றிய நூலெலாம்
கலங்கரை விளக்கமா அல்ல மனோன்மணி
தமிழைஒப் பிட்டவு ருவகமே இளமையாம்
அழியா தமிழணங் கிளமையென் றுவாழ்த்திட
அதையெடுத் திதில்புகட் டினாராம்
கம்பவள் ளுவனுமி தைச்சொல் லவில்லையே!

ஆடு வோமேப் பள்ளுபா டுவோமே
ஆனந் தசுதந் திரமடைந் தோமென
ஆடு வோமே பள்ளுபா டுவோமே
என்றுசு தந்திர மடையுமுன் பாடினான்
அன்றுசொன் னதுபோல் மீண்டும் பாரதி
செந்தமிழ் நாடெனும் போதினில் இன்பத்
தேன்வந் துபாயுது காதினில் என்றார்
சொன்னவன் பாரதி அழைத்தவன் பாரதி
தமிழ்நா டென்றவன் பாரதி
செந்தமிழ் நாடென் றவன்பா ரதியே!


ராஜப்பழம் நீ
(2.2.2018)

எழுதியவர் : பழனிராஜன் (2-Feb-18, 9:13 am)
பார்வை : 174

மேலே