கவிஞன் கவிஞன் கவிஞன்

(ஆசிரியப்பா)

கோடா னகோடிகொ டுப்பினும் தன்னுடை
நாக்கோ டாமைகோ டிபெறும் ஔவை
யாகா வராயினும் நாகாக் கவள்ளுவன்
பார்புகழ் வள்ளுவன் வாக்கறிந் தவர்சிலர்
பார்புக ழவர்வெளி வந்துள றவில்லை
நட்டிடா கீரையை நாட்டில் பறித்து
நட்புடன் விருந்தோம் பியதுமுன் கதையாம்
புட்டிகுட் டியுடன் ஓட்டலில் படுத்து
கட்டிப் புரண்டுபாட் டெழுதுவ திப்போ
செட்டாக வாழ்ந்த புலவனே தப்போ
தட்டா நாலுப் படம்போ துமிப்போ
படம்ஓ டினால்போ துமிப்போக் கவிஞன்
கவிஞன் கவிஞன் கவிஞன்
குத்தாட் டபாட்டெழு தக்கவி ஞனிப்போ !

ராஜப்பழம் நீ
(2.2.2018)

எழுதியவர் : பழனிராஜன் (2-Feb-18, 9:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 165

மேலே