கவிதை
கண்ணில் தோன்றும் காட்சியின்
காதல் ஓவியம் கவிதை..
கடைக் கோடி கற்பனையின்
மறுபக்கம் கவிதை....
நம் தாய் பாடும் தேன் தமிழ்
தாலாட்டு தித்திக்கா கவிதை....
தந்தை சிந்தும் வியர்வை துளி
ஒவ்வொன்றும் விலையில்லா
கவிதை.....
துள்ளி ஓடும் மானின் புள்ளியில் மறைந்திருக்கும் கோளங்கள்
கவிதை....
கொட்டும் மழையின் சத்தம் கவிதை..
அவள் கண்ணின் காவியம் கவிதை..
ஓடும் மணி நேரம் ஓய்வில்லா
கவிதை..
நேற்று; கிடைக்கப் பெறா கவிதை
இன்று; மதிப்பில்லா கவிதை
நாளை;எதிர்பார்ப்பு கவிதை....
உழுவும் உழைப்பாளி "உணவு
கவிதை"...