நம்பிக்கை
நம்பிக்கை சிறகை
நசுக்கிய தோழனே...
பயிரை மேய்ந்த வேலியாக
பச்ச துரோகம் பாவமடா..!
காவலாக இருந்த நீ
கால்களை வாரியது சோகமடா..!
நிறம் மாறும் பச்சோந்தியும்
குணம் மாற நினைப்பதில்லை..!
பணம் என்னும் பிச்சைக்காக
பழகிய பாசம் மறந்தாயடா..!
தேனிருக்கும் மலரென்று
தேர்ந்தெடுத்தேன் நான் உன்னை..!
பூச்சி உண்ணும் பூவென்று
புரியலயே அப்போது..!
உணர்வாக இருந்த என்னை
உணவாக கொன்றாயே..!
உறவாக இருந்த நட்பு
உயிரற்று போனதடா..!
உறவாக இருந்த நட்பு
உயிரற்று போனதடா..!!!