நிலவும்,முகிலும்

நீல வானில் வெண்ணிலா
அங்கு நிலவோடு உறவாட
வந்ததோ வெண்முகில்கள் ; இல்லை
மொட்டை வானில், இரவில்,
நிழல் தேடி முகில்கள் கீழ்
ஓடி ஒளிந்ததோ நிலவு !
விண்ணோடு, முகிலொடு
உறவாடும் நிலவே நீயே
பதில் சொல்வாயோ இதற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Feb-18, 8:30 am)
பார்வை : 178

மேலே