பார்வையின் அர்த்தங்கள்

கள்ளமில்லா இளம்பிள்ளை
அதன் விழிகளில் பார்வை
கள்ளப் பார்வை , ஆயின்
வஞ்சமேதுமிலா வெறும்
குறும்புப் பார்வை -இதோ
என்னையே மறைந்து மறைந்து
ஓரக்கண்ணால் பார்க்கின்றானே
இவன் பார்வை கள்ளப் பார்வைதான்
ஆயின் அதில் ஒரு மோகம்தான்
புன்னகைக்கிறதாய் நான் காண்கின்றேன்
அறிமுகம் ஏதுமில்லாது அந்த பார்வையால்
என்னை அழைக்கும் அவன் பார்வைக்கு
பதில் பார்வைத்தர தயக்கம்தான் எனக்கு
எந்த புற்றில் எந்த பாம்பிருக்குமோ
யாரறிவார் என்று என் தாய் சொன்னது
ஞாபகத்தில் வந்திட , அவன் பார்வையையும்
அவனையும் கண்டுகொள்ளாது போல்
அங்கிருந்து மெல்ல நழுவினேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Feb-18, 8:58 am)
பார்வை : 264

மேலே