கோபமா

நாட்டுப் புறப் பாட்டுபோல படிக்கவும்🌸பாடவும்🌸
பச்சத் தண்ணி பல்லுல படல,
சுட்டு வச்ச இட்டிலி தொடல,
என்ன கட்டிகிட்ட மாமா உனக்கு என்னய்யா கோபம்,
மூணு நாளா தள்ளி நிக்கிறேன்
அடக்க வேணும் தாபம்!
நல்லாவே அணைச்சுக்கலாம்
நாலாம் நாளில் நீயும்,
🌸
பட்டுச் சட்ட போடவில்லை,
பஞ்சாயத்துக்கும் போகவில்லை,
என் பட்டு கன்னம் தொட்டுத்
தடவ பஞ்சாப் பறக்கிற நீயும்
🌸
துண்டெடுத்து தோளிலே போடல,சிங்கமான நடைய காணல,
என் சேல கொசுவம் சீக்கிரமே
தொடலாம் வா மாமா:
🌸
ஏரெடுத்து பூட்டவும் இல்ல, அடுத்தவளை ஏறெடுத்தும்
பார்க்கவும் இல்ல,
சீரெடுத்து வந்த என்னை
சீக்கிரமே தொடலாம் வா மாமா. 🌸பச்சதண்ணி🌸

எழுதியவர் : பாலமுருகன்பாபு (3-Feb-18, 8:58 am)
பார்வை : 529

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே