காதல் கூடு

முதல் பார்வையில் என்னில் மின்சாரம் பாய்ச்சினாய்
உன் நெஞ்சாக் கொப்பில் நுழைந்து கூடு கட்ட
கடல் மேலே வட்டமிடும் நீர்ப் பறவையாய்
தினமும் அலைகிறது என் மனது,
கடல் நீர் தெளிந்தால் தானே
மீன் இருக்குமிடம் புலனாகும்
உன் எண்ணம் தெளிந்தால் தானே
இங்கு நான் இருக்குமிடம் உருவாகும்
ஆக்கம்
அஷ்ரப் அலி