நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே – மூதுரை 8
நேரிசை வெண்பா
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ(டு)
இணங்கி யிருப்பதுவும் நன்று. 8 – மூதுரை
பொருளுரை:
நற்குணமுடையவர்களைப் பார்ப்பதும், நற்குண முடையவர்களின் பயன் தரும் சொல்லைக் கேட்பதுவும் நன்மை தரும்.
நற்குணமுடையவர்களின் நற்குணங்களை மற்ற வர்களிடம் பேசுவதும், அவர்களோடு மனமொத்து இணக்கமாக நட்புடன் கூடி இருப்பதுவும் நன்மையே தரும்.