தீயாரோடு இணங்கி இருப்பதுவுந் தீது – மூதுரை 9
நேரிசை வெண்பா
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ(டு)
இணங்கி யிருப்பதுவுந் தீது. 9 - மூதுரை
பொருளுரை:
தீயகுணம் உடையவரைக் காண்பதுவும் தீது பயக்கும்; தீயகுணம் உடைய வருடைய பயனற்ற சொற்களைக் கேட்பதுவும் தீது பயக்கும்;
தீயவருடைய தீய குணங் களைப் பேசுதலும் தீமையானதே; அத் தீயவருடன் இணக்கமாக நட்புடன் கூடியிருப்பதும் தீமையே ஏற்படுத்தும்.