நண்பனும்,நட்பும்

அவர்கள் நண்பர்கள்
இணைப்பிரியா நண்பர்கள்
வாழ்வில் இன்பம் துன்பங்களை
ஒருவருக்கொருவர் பகிர்ந்து
இன்பத்தில் இன்பம் கண்டு
துன்பம் வந்தபோது
அயராது எதிர்நீச்சலிட்டு
துன்பங்கள் அத்தனையும் கடந்து
கரையேறி வாழ்ந்து வருபவர்,
இவ்விரு உண்மை நண்பர்கள்;
அவர்கள் நட்பின் பிணைப்பை
அந்த ஆண்டவனும் தகர்த்திட எண்ணிவிடமாட்டான்
என்றே தோன்றுகின்றது

பிறந்தவர் எல்லாம் இறந்தே தீரவேண்டும்
இது இயற்கையின் நியதி எனில்
இறப்பு இவர்கள் உடலை பிரித்திட்டாலும்
இவர்கள் நட்பு காலத்தை வென்று
அவர்கள் இறப்பின் பின்னும்
அழியாது இருந்துவரும்
நடிப்பிற்கோர் எடுத்துக்காட்டாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Feb-18, 8:25 am)
பார்வை : 435

மேலே