உயிருக்கு தலைவன் இறைவன்

கண்கள் பேசும் அது
காதுகளுக்கு கேட்காது
அவை காதல் தேசத்தின்
எல்லைகளில் காதலுக்கு
கொடுக்கும் தொல்லைகள்

அவற்றை உண்டு இல்லை
என்று ஆக்கும் வரையில்
சாதி மதம் பேதங்கள் இன்னும்
ஏழை பணக்காரன் என்று வாழும்
பேசும் வாதிகள் ஒழிந்த பின்பு

கண்களும் கண்களும் பேசுவது
காதுகளுக்கு கேட்கக் கூடிடும்
அன்றே காதலுக்கு சுதந்திரம்

கண்களுக்கு கதவா யிரண்டு
இமைக ளுண்டதனுள் தாழும்
பூட்டு மதன் மனத்தி டமுண்டு

வாயிற்கு க்கதவா யிரண்டு
இதழ் களுண்டதனுள் தாழும்
பூட்டு மதன் மனத்தி டமுண்டு

செவியிற்கு க்கதவு மில்லை
உள்தாழு மில்லை பூட்டு மட்டு
மேயுண்டு அதுவும் மனதிடமே

உணர்வுக்கு மங்கணமே யுளது
நாசிக்கோ கதவு மில்லை யஃதே
உள் தாழு மில்லை பூட்டு மில்லை
ஆதிமூலன் கைவசமே யுள்ளதது

நான்கு பொருப்பினை மனிதரிடம்
ஒப்படைத்தான்; மனிதனோ வப்
பொருப்பினை தவற விட்டான்

இதனால் தானோ என்னவோ
முக்கிய மான பொருப்பினை
அந்த ஆண்டவனே ஆளுகிறான்
உயிரெனும் உன்னத பொருப்பை

பறவைக்கும் நமக்கும் வித்தியாசம்
நாம் இருகால்களை உயர்தினால்
கீழே விழுந்து மண்ணை கவ்வலாம்
பறவை உயர்த்திட மேலே பறக்கலாம்

யாருக்கு வேண்டுமானாலும் நீயோ தலைவனாக இருந்திடலாம் ஆனால் உயிருக்கு தலைவன் வேறொருவன்
அவன்தான் அந்த இறைவன் மறவாதே
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை, மகாராஷ்டிரம்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (5-Feb-18, 7:41 pm)
பார்வை : 124

மேலே