மரம் ஒரு வரம்

மரம் மனிதகுலத்திற்கு
இயற்கை கொடுத்த வரம்
வாழும்போதும் அது மரம்
செத்தபின்பும் அது மரம்
மனிதன் செத்தபின்பு...?

மனிதன்
பிறக்கும்போதும்
இறக்கும்போதும்
மரத்தின் நன்கொடை
தொட்டிலாக சவப்பெட்டியாக

மரத்தவெச்சவன்
தண்ணி ஊத்துவான்
நீ மரமும் வைக்கல
தண்ணியும் ஊத்தல
மரத்தோடு உனக்கேன் வழக்கு...

உன் எட்டுக்கு எட்டு
இராஜ்ஜியத்திலே நீ
காற்றுக்கு மின் விசிறி
தேடுகிறாயே
உலகுக்கே சுத்தகாற்று
தரும் மரத்தை வெட்ட
நினைக்கிறாயே இது
என்ன நியாயமா தருமமா...

மரத்தை
குழந்தையாக நேசி
பெற்ற அன்னையாக பார்
காவலனாக பார்
வள்ளளாக பார்
உலகத்தில் மிகச்சிறந்த
நன்கொடையே மழைத்தான்
அதை கொடுப்பதே மரம்தான்...

வீட்டுக்கு ஒரு
மரம் வளர்ப்போம்
நாட்டுக்கு நாம்
தரும் நன்கொடை
இதுதான்...

மரங்கள் பறவைகளின்
அடைக்கலம்
பறவைகள் சுற்றுச்சூழலின்
பாதுகாவலர்கள்
மரம் வளர்ப்போம்
சுற்றுசூழலை காப்போம்..

மரங்கள் நிழல் கொடுக்கிறது
மழை கொடுக்கிறது
வெப்பம் தனிக்கிறது
காற்றை துய்மையாக்குகிறது
உரம் கொடுக்கிறது
ஏன் ஞானத்தையும் கொடுத்தது...

இன்னும் எதனை
எதிர்பார்க்கிறாய் மரத்திடம்
இத்தனையும் பெற்று
இன்னும் ஏன் அதை
வஞ்சிக்கிறாய்
அதன் ஆயுட்காலம் அதிகம்
இன்னும் வாழும்
வாழவிடு வாழட்டும் மரம்
இவ்வையைம் உள்ளவரை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Feb-18, 6:48 am)
Tanglish : maram oru varam
பார்வை : 6538

மேலே