மணக்கும் சந்தனமே
வெட்டினாலும் மனக்கின்றாய்
வெட்டிய கட்டையை
செதுக்கி சிலையாக்கினாலும்
இன்னும் அலங்கார பொருட்கள்
எது செய்து வைத்தாலும் அதிலெல்லாம்
உள்ளிருந்து நீங்கா மணம் தருகின்றாய்
கல்லில் உரைத்து கரைத்தாலும்
சந்தனகுழம்பாய் இறைவனுக்கு
அபிஷேக பொருளாகி மணக்கின்றாய்
எரித்தாலும் இன்னும் கொழுந்து விட்டெரியும்
அந்த தீயின் உள்ளிருந்து
மணக்கின்றாய் , என்னென்பேன்
உந்தன் தெய்வீகத்தன்மையை
சந்தன மரமே , இயற்கைத்தாயின்
மண்ணிற்குப் படைத்த சீதனமே
தென்றல் வந்துனைத் தீண்ட
அங்கு சந்தனக் காற்றாய் மாறி
ஆடுகிறாய் சந்தனக் காட்டில் !