அழகு

கடலுக்கழகு பறந்து நீண்ட கடற்கரை
நதிக்கழகு ஜீவநதியெனும் பெயர்
மலருக்கு அழகு வனப்பும் நறுமணமும்
பாடலுக்கழகு பண்ணும் தாளமும்
கவிதைக்கழகு எதுகையும் மோனையும்
நிலவிர்க்கழகு முழுமதி நிலவு
காளைக்கழகு பரந்த உள்ளமமும்
விரிந்த மார்பும் பருத்த தோளும்
நெஞ்சினில் வீரமும்
பெண்ணுக்கழகு எழில் முகமும்
சிற்றிடையும் அச்சமும் , நாணமும்
மடமையும் பயிர்ப்பும், தாயின் பொறுமையும்
தமிழுக்கழகு 'ழ கரமும் முத்தமிழ் பூஷணமும்
இப்படியே காண்பதில் எல்லாம் அழகு கண்டிட
எல்லாம் இன்ப மயமே வாழ்வில் வளமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Feb-18, 10:10 am)
Tanglish : alagu
பார்வை : 206

மேலே