இயற்கையின் படைப்பில்

(பனி விழும் மலர் வனம் பாடல் மெட்டில் எழுதியது)
இயற்கையின் படைப்பிலே நமக்கேதும் குறைவில்லை;
செயற்கையை நாடினால் உண்டாகும் தொல்லையே; ஏஹே!
சித்தரும் முனிவரும் சொன்னார்கள்
ஏட்டிலே; (இயற்கையின்)
காலை எழுந்தால் மனக் கலக்கம்;
மாலை வரையில் அது இருக்கும்:
யோகா பயிற்சி பலன் சேர்க்கும்;
இயற்கை உணவே உயிர் நாதம்(2)
மனிதனின் வாழ்க்கையே தடம் மாறும் பயணமே! ஏஹே,
தியானத்தின் வழியிலே இனிதாகும்
தருணமே!
மனதை ஒருமுகப்படுத்துங்கள்
இறைவனை நினையுங்கள்
இதயம் இனித்து வாழ்க்கை வளமாகும்_____(இயற்கையின்)
ஓசோன் படலம் துழை ஆச்சு;
சுவாசக் காற்று விலை ஆச்சு;
பாசம் நேசம் கலைஞ்சாச்சு:
மோசம் வேஷம் நிலைச்சாச்சு;(2)
மனிதரின் மனங்களே
உயிரில்லா பிணங்களே;
பிறந்திட்ட பிறப்பினை
சிறப்புற ஆக்குவோம்;
வானம் வசப்படும் வகையினில்
மனிதனின் முயற்சிகள்
யாவும்ஜெயமாகும்;___________(இறை)
இறைவனின் படைப்பிலே
பயிராகும் உயிர்களே;
மனிதனின் கைகளில்
சதிராடும் இயற்கையே;ஏஹே!
இயற்கையை சீண்டினால்
அழிவேற்கும் உலகமே!(இயற்கை)

எழுதியவர் : பாலமுருகன் பாபு (6-Feb-18, 2:07 pm)
பார்வை : 846

மேலே