பன்னிற அழகியே பைங்கிளியே
தென்னையில் ஊஞ்சல் கட்டி
திகட்டாத விருந்தளிப்பாய்
விண்ணிலே சிறகடிப்பாய்
விருப்போடு குதூகலிப்பாய்
கொச்சை வாய் மொழியில் பேசி
கொஞ்சுவாய் மழலையை மிஞ்சுவாய்
கழுத்தின் ஓரம் உனக்கு அழகு ஆரம்
பார்ப்பவர் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்
பட் டிளம் மேனி நீ பசுமையின் உச்சம்
பட்சியர் கூட்டத்தின் பன்னிற அழகியே
பைங்கிளியே நீ தெவிட்டாத தீங்கனி
காணக்காண சலிக்காத வனப்பி நீ
ஆக்கம்
அஷ்ரப் அலி