காதலின் தீபம் 3

என்னவளே
என்ற வார்த்தையையே
எனக்கு எட்டிப்போக
செய்கிறாயே
நினைவிருக்கா உனக்கு
நான் வரைந்த
காதல் மடல்களில்
என்னவளே என்று துவங்கும்
அந்த அன்பு வார்த்தையை
மறக்க சொல்கிறாயே
காதல் என்ன வெறும் கனவா
மறந்துப்போவதற்கு...

காற்றை கேட்டுப்பார்
மழையை கேட்டுப்பார்
மேகங்களை கேட்டுப்பார்
பூக்களை கேட்டுப்பார்
இசையை கேட்டுப்பார்
குயிலை கேட்டுப்பார்
அவைகள் சொல்லும்
நம் காதல் கதையை
அழிக்க சொல்கிறாயே
காதல் என்ன கரும்பலகை
எழுத்துக்களா அழித்துவிட
அது இதயத்தில் பச்சைகுத்திய
எழுத்துக்கள்...

மூச்சுவிட மறக்கச்சொல்
மறந்துப்போகிறேன்
விழித்தெழ மறக்கச்செல்
மறந்துப்போகிறேன்
உனை மட்டும் மறக்கச்சொல்லாதே
அது இந்த ஜென்மத்தில்
என்னால் முடியாது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Feb-18, 9:07 am)
பார்வை : 194

சிறந்த கவிதைகள்

மேலே