இல்லாள்
ஆலிங்கனம் ஆட்க்கொள்ளும் வேலையில்,
அந்தப்புரத்து கன்னியர் போலொருத்தி,
ஆயிரமாயிரம் லீலைகள் புரிந்திடும் கார்மேகனன் கூடிடும் ராதையை போலொருத்தி,
மழையென பொழிந்திடும் அன்னையின் அன்பையே அடைமழை போலவே அனைத்துணர்த்தும் பெண்ணொருத்தி,
இவள் போலவே வரம்கேட்டு தோற்ற ஆடவர் ஆயிரம்....
நம்பிட உமக்கு மனம் மறுக்கும்,
எங்களின் இல்லத்தையும், உள்ளத்தையும் ஆளும் அவள்
'என் இல்லாள்'
-கலாம்தாசன்