தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி14

" தேடி வந்த சொந்தமே!
மனதால் மதம் கொன்ற பந்தமே!
எவ்விதம் சொல்லுவேன் நன்றி உனக்கு!

தேசம் கடந்த நேசம் கொண்ட நெஞ்சமே!
தேகத்தில் என்னுயிர் நிலைக்கக் காக்க வந்த தேவதையே!
எண்ணத்தின் ஓவியமே! சிந்தனைக் காவியமே!

சிறு கண்ணீர் நீ சிந்தக் கண்டால் சீவனுடன் நான் வாழ்ந்தும் பயனில்ல...
அதை விட வேறுஜென்ம சாபம் வேறேதுமில்ல...
கைகோர்த்தே உன்னோடு வருவேன் புள்ள...
உன் விருப்பங்கள் யாவும் நிறைவேற்றுவேன் மெல்ல...
என் மனதில் இருந்து உதிக்கும் இவ்வார்த்தைகள் என்றும் பொய்கள் அல்ல...

இறைவன் தந்த வரமே!
நீயே எந்தன் தாரமே!
நீயின்றி எனக்கில்லை ஆதாரமே! "

என்று வரிகளை தனது டைரியில் வரைந்து கொண்டிருந்தான் அசோக்.

" யாவும் நலமாய் நடந்திட, எல்லாம் வல்ல இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன். ",என்று தொழுகை செய்து முடித்துவிட்டு கல்லூரிக்குக் கிளம்பத் தயாரானாள் அதீஃபா.

இயற்கை எழில் கொஞ்சும் விளை பூமியைக் கடந்த நதிக்கரையில் சிவா யோகாசனம் செய்துக் கொண்டிருந்தான்.

ஜோசப் தனது மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். சித்ரா அதீஃபாவிற்கு உதவிக்கொண்டிருந்தாள்.
கஸ்தூரி அம்மா சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
சுப்புராஜ் வீட்டுத் திண்னையில் அமர்ந்திருந்தார்.
இங்கு இவ்வாறு இருக்க, சென்னையில் நட்சத்திர விடுதியில் அறை எண் 76-ல் ஒரு தொலைபேசி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
" ஹலோ! யாரு பேசுறது? "
" தர்மராஜ் இருக்கானா? "
குரலில் அதிகாரம் தொனித்தது.
" அவரு இப்போ கொஞ்சம் பிஸியா இருக்காருங்க. எதா இருந்தாலும் என்னிடம் சொல்லுங்க. அவர் கிட்ட சொல்லிடுறேன். "
" டேய்! உங்கிட்டலாம் சொல்ல முடியாது. அவன் கிட்ட நான் பேசனும். போனைக் கொண்டுபோய் கொடு. "
" இப்போ முடியாதுங்க. அவரு முக்கியமான வேலையில இருக்காரு. "
" என்னடா முக்கியமான வேலை? 60 வயசு கிழட்டு பய 20 வயசு பொண்ணை கொஞ்சுட்டு இருக்கான். அதுக்கு முக்கியமான வெலைனு சாக்கு சொல்லுறீயா? டெல்லில இருந்து கால் பண்ணியிருக்காங்கனு சொல்லி அந்தக் கிழவனை வரச் சொல்லு. "

பதற்றமாக, " இதோ சொல்லுகிறேன் சார். வெயிட் பாண்ணுங்க. ", என்று கூறிவிட்டு பக்கத்து அறை நோக்கி நடந்தான் ஆகாஷ்.
பக்கத்து அறைக் கதவைத் தட்டினான்.

" யாருடா அது நேரம் காலம் தெரியாமல் நரி பூஜையில நாய் புகுந்தமாதிரி? "
தர்மராஜின் குரல் உள்ளிருந்து வர, " ஐயா! நான் தான் உங்க பி.ஏ ஆகாஷ். டெல்லில இருந்து முக்கியமான கால் வந்துருக்கு. உங்ககிட்ட தான் பேசுவாங்களாம். ",என்றான் ஆகாஷ்.

" டேய்! நான் முக்கியமான வெலைல இருக்கேன். அப்புறம் வந்து பேசுறேன்னு சொல்லு டா. "

" சொன்னென் சார். அதுக்கு அந்த அறுபது வயசு கிழவனுக்கு இருபது வயசு பொண்ணைக் கொஞ்சுறது தான் முக்கியமான வேலையானு கேக்குறான் சார். "

" அப்படியா கேட்டான். சரி இதோ வாரேன். "
போதையில் தள்ளாடி எழுந்து வந்து கதவைத் திறந்தான் தர்மராஜ்.
தொலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.

" ஹலோ! "

" என்ன தர்மராஜ்? சௌக்கியமா? "

" உங்க புண்ணியத்துல எல்லாம் சௌக்கியம் சுவாமிஜி. "

" சந்தொஷம்! ஒரு முக்கியமான வேலை, அதான் நானே கால் பண்ணியிருக்கேன். இன்று மாலை ஆறு மணிக்கு நான் அனுப்புன ஒரு ஆள் வருவான். அவன் பெயர் ராகவன், அவன் வந்த வேலை முடியும் வரை அவனுக்கு நீங்க தான் பாதுகாப்பு கொடுக்கனும். "

" அது எனக்கு கிடைத்த வரம் சுவாமிஜி. நீங்க கவலைப் படாதீங்க. நான் பார்த்துக்கிறேன். "
தர்மராஜ் காக்கா பிடித்தான்.

" உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு தர்மராஜ். விரைவில் சந்திப்போம். "

தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மாலை ஆறு மணிக்கு ராகவன் வந்தான்.
போலீஸாரால் பல குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி.
அவனுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி சுவாமிஜி தர்மராஜிடம் கேட்பதற்குக் காரணம் தர்மராஜ் ஒரு அரசியல் தலைவர். அதோடல்லாமல் நடப்பு முதல் அமைச்சர். தமிழ்நாட்டில் தமிழின் பெயரால் தமிழர்களிடையே நல்மதிப்பைப் பெற்று வைத்துள்ள தலைவர். ஆதலால், தான் ராகவனை தர்மராஜிடம் அனுப்பி வைத்துள்ளார் சுவாமிஜி.
எதற்காக அனுப்பி வைக்க வேண்டும்?
ஆன்மிக கொள்கையைப் பரப்புவதற்காகவா? இல்லைங்க, அது தீவிரவாதினா, இது பயங்கரவாதி. இரண்டும் சேர்ந்து தமிழ்நாட்டில் அமைதியைக் கெடுக்கத்தான் திட்டம் போடுதுங்க....

இந்த உலக வரலாற்றுப் பக்கங்களைச் சற்று திருப்பிப் பார்த்தால் எண்ணற்ற உதாரணங்கள் கொட்டிக் கிடக்கிறதுங்க...

இந்த குணங்கெட்ட குப்பைகள் ஒரு பக்கம் உலக தங்கள் கைக்குள் வைத்து ஆட்ட, மறுபக்கம் குணமுள்ள மனிதர்கள் ஏழ்மையில் வாழ்ந்தாலும் நெறி பிறழாமல் அடுத்தவரைக் கெடுக்காமல் வாழ்கிறார்கள்.

அதீஃபாவுக்கு நல்ல கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. விடுதியில் தங்கிக் கல்லூரி சென்றாள்.
விடுமுறை நாட்களில் அசோக்கின் கிராமம் வந்துவிடுவாள்.
ஆனந்தமான வாழ்க்கை அழகாய் நகர்ந்தது.

ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை நந்தினி, சித்ரா, அதீஃபா மூன்றுபேரும் பட்டணத்துக்குக் கிளம்பிச் சென்றாள்.
கஸ்தூரி அம்மா அவர்களிடம், " அசோக்கும், சிவாவும் வரவிட்டு அழைத்துச் செல்லுங்கள். ",என்று கூறினார். ஆனால், அவர்கள் மூவரும் சென்றுவிட்டனர்.

இவர்கள் மூவரும் தனியாக செல்வதைக் கண்ட ஜோசப் அவர்களைப் பின்தொடர்ந்தார். அவர்கள் மூவரும் ஷாப்பிங்க் சென்றார்கள்.
அசோக்கும், சிவாவும் வீடு வந்தார்கள். கஸ்தூரி அம்மா நடந்ததைச் சொல்ல இருவரும் பட்டணத்துக்குச் சென்றார்கள்.

அங்கு மூன்று பெண்களும் தனியாக வந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட ராம் ஐம்பது பேருடன் மூவரையும் கடத்திச் செல்ல வந்தான்.
மூன்று பெண்களையும் இழுத்துச் செல்வதைக் கண்ட ஜோசப் ஒற்றை ஆளாக வந்தவர்களை எதிர்த்து நின்றார்.
அங்கு சண்டை ஆரம்பமாக, அங்கிருந்த கூட்டம் களைந்து ஓட்டம் பிடிக்க, சிவாவும், அசோக்கும் ஓடி வந்தார்கள்.
அங்கு ஒருவர் தனித்து நின்று கடத்த வந்தவர்களோடு போராட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
சிவாவும், அசோக்கும் களத்தில் இறங்க சண்டை விரைவாக நிறைபெற்றது.ஜெகன் வந்தார். ராம்-ஐயும், உடன் வந்தவர்களையும் கைது செய்து கூட்டிச் சென்றார்.

நந்தினி சிவாவிடம் மன்னிப்பு கேட்க, அதிஃபா அசோக்கிடம் மன்னிப்பு கேட்டாள்.
அவர்களும், " சரி விடுங்க. உங்களால தான் அந்த கூட்டத்தைப் பிடிக்க முடிந்தது. ", என்றனர்.
" ஆமா சித்ராவை எங்கே? "

" அதோ அவள் டாக்டருக்கே மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். "
அசோக்கும், சிவாவும் ஜோசப்பிடம் வந்து நன்றி சொன்னார்கள். பிறகு, எல்லாரும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
அன்றிரவு பொழுது கழிய மறுநாள் காலை அசோக் அதீஃபாவைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றான்.
சிவா வீட்டில் இருந்தான். அசோக் அதீஃபாவை விட்டு விட்டு வந்ததும் சிவாவும், அசோக்கும் ஜெகனைக் காணச் சென்றார்கள்.

ஜெகன் வீட்டில் புறாக்களுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்தார்.

அசோக்கையும், சிவாவையும் பார்த்த ஜெகன், " இந்த புறாக்களைப் பார்த்தீர்களா? எவ்வளவு சந்தொஷமாக ஒற்றுமையாக இருக்கின்றன! என்ன இருந்தாலும் ஆறறிவு படைத்த மனிதன் இவற்றிற்கு ஈடாக மாட்டான்... ",என்றார்.

அசோக், சிவாவின் கண்கள் புறாக்களை நோக்கின...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Feb-18, 1:32 am)
பார்வை : 165

மேலே