மண்தாழி

மண்தாழி

குறுகியவன் குறைதீர்க்க கலஞ்செய்த குயவன்....
மலையென மனம் கொண்ட மனிதங்கள் மறைந்த
மணல் செய்த தாழியிது.....
உள்புறம் காரிருள் கருமையையாய்.....
வெளிப்புறம் சிவப்பு வெளிச்சத்தின்
வேள்வியாய்….
வாய்புறமும் ,வால்புறமும் சுருங்க….
இடைப்புறம் அகல சுடப்பட்ட தாழியிது….
ஆதிதமிழர்களின் ஆதாரம் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி....
பெயர் சொல்லும் பெருமையே இத்தாழியின் பெருமையும் சொன்னது...
பானைகளின் பிறப்பில் தாழியே பழந்தலைமுறை..
வீறுகொண்ட வீரமோ விடைகொள்ளும் இடமிது..
ஈமச்சடங்கின் இறுதியே மண்தாழி..
வாழ்க்கைகள் வளரவே,
வரலாறுகளும் நம்மை வரையறுத்தது..
இல்லாத ஒன்றை இருப்பதாய் தேடும் மனிதமே..
இருந்த ஒன்றை மறையாய் காண்பெதேனோ...?
வாழும் வாழ்வில் வளர்ந்தாலும்..
வாழ்ந்த நம் வரலாற்றை மறவாதே..!!

எழுதியவர் : கு.அருண் ஆறுமுகம் (9-Feb-18, 8:58 pm)
பார்வை : 69

மேலே