பையன் என்ன பன்றான்
சட்டையை மறந்து ...
சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து...
பட்டம் வாங்க
பாடுபட்டவர் ...
இன்று...
வேலை வாங்க ...
விறகாய் எறிகிறார் ...
அதை ..
சட்டை செய்யாத மகனோ...
நொட்டை பேச்சு பேசி ...
குட்டை புத்தியுடன் ...
கும்மாளம் போடுகிறான் ...
வெட்டியாய் திரிவதை பார்த்து ...
வெட்கி வேதனையுடன் ...
தரை பார்த்து நடக்க பழகினார்
அப்பா ...!
சமூகமோ ...
விடாமல் அவரை ...
துரத்திக்கொண்டே ....?
பையன் என்ன பன்றான் ...?