சிவப் பெருமானே
திருவடி தூக்கியே ஆடிய சிவனே
தில்லைக் கூத்தன் என்பதும் அவனே
அழிக்கும் தொழிலில் ஆற்றல் பெற்றவன்
துன்புறும் பக்தனின் துயரம் துடைப்பவன்
புலித்தோல் அணிந்த பூலோக நாதனே
புதுமைகள் புரிந்திட வருவாய் புனிதனே
ஆனந்த தாண்டவம் ஆடிய ஆண்டவா
உன்னருளைத் தந்து அகிலம் காக்க வா.