முதல் காதல்
முதல் காதலை என் பாணியில்
சொல்ல
(ஆண்) ....
அவன் ஒரு பொறுக்கி
அவன் ஒரு ரவுடி
அவன் ஒரு லூசு
என்று சொல்லி தான்
என்னை காதலனாக்கி கொண்டால் ..
(பெண்)....
இந்த பொறுக்கி தான்
பொறுப்பானவனாகவும்.
இந்த ரவுடி தான்
என் மனதின் ரட்சகனாகவும்.
இந்த லூசு தான் என்னை
லூசாக்கி யோசிக்க வைத்தவன்.
என்றும்
அவன் நிறம் தான் என்னை
ஈர்த்தது என்றும்
அவன் முகம் தான் என்னை
காதலிலும்
அவனை கள்வனாக்கி கொள்ளவும்
தோன்றியது என்றும் சொல்லினால் ..
இப்படி என் பாணியில் சொல்ல நினைத்து
அவள் பாணியில் சொல்லி முடித்து விட்டேன் .....
என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி