முதுமொழிக் காஞ்சி 24

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
அருமை யுடையதன் பெருமை பழியார். 4

- பழியாப்பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

அருமையுடைய பொருளைப் பெற முயற்சித்து முடித்துக் கொள்ளும் பொழுது அரிதென்று பழித்து அதன்கண் உள்ள முயற்சிப் பெருமையைத் தவிரார்.

பதவுரை:

அருமை உடையதன் பெருமை - அருமையுடையதொரு பொருளை பெற அரிதென்று முயற்சிக்கும் பெருமையை, பழியார் - பழித்துத் தவிரார்.

கிடைத்தற்கு அருமையான பொருளினது அருமையைப் பழியாமல், அது கிடைத்தற்குரிய கௌரவமான முயற்சிகளைச் செய்வர்.

'செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.' - திருக்குறள்.

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே பெரியோர்; செய்ய முடியாதவரோ சிறியோர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-18, 12:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 92

மேலே