காசு பணம் துட்டு, மணி மணி---------------------படிப்பதைப் பகிர்கிறேன் -----
செந்தில்: கறுப்புப் பணத்த ஒழிக்க நம்ம பிரதமரு சொன்ன ஐடியா பிரமாதம்ணே.
சவுண்டு மணி: எத வச்சிடா சொல்ற?
செந்தில் : என்னண்ணே நீங்க, ஒலகம் தெரியாம இருக்கீங்க. பேசு புக்கு, டுவிட்டரு, வாட்டுசப்புல எவ்ளோபேரு பாராட்டுறாங்க தெரியுமா?.
சவுண்டு மணி: எல்லாரும் பாராட்டு றது இருக்கட்டும்டா. நடிகருங்க, தொழிலதிபருங்கல்லாம் பாராட்டுறாங் களே, அப்ப அவங்கக்கிட்ட கறுப்புப் பணம் இல்லியா?
செந்தில்: அதாண்ணே எனக்கும் ஆச்சரியமா இருக்கு. அவங்கக்கிட்ட உள்ள பணத்த எல்லாம் என்ன செய்வாங்க?
சவுண்டு மணி: அவங்க என்ன செய்வாங்கன்னு எனக்கு தெரியாதுடா. பொதுவா சொல்றேன் கேட்டுக்கோ. கறுப்புப் பணம் வச்சிருக்கவன் எல்லாம் ஐநூறு, ஆயிரம் ரூவா நோட்டா வச்சிக்க மாட்டாங்க. வெவரம் தெரியாதவங்கதான் ஐநூறு, ஆயிரத்த பதுக்கி வச்சிருப்பாங்க. கொஞ்சம் வெவரம் தெரிஞ்சவங்க தங்கம், வைரமா வாங்கி வச்சிருப்பாங்க. நல்லா வெவரம் தெரிஞ்சவங்க அமெரிக்க டாலரா மாத்திப்புடுவாங்க. ரொம்ப நல்லா வெவரம் தெரிஞ்சவங்க சுவிஸ் பேங்க்ல வச்சிருப்பாங்க. இப்பிடி நெறய்ய ஐடியா இருக்குடா.
செந்தில்: எப்பிடி பாத்தாலும் ஐநூறு, ஆயிரத்த பதுக்கி வச்சவங்களுக்கு நஷ்டம்தானண்ணே.
சவுண்டு மணி: அரசாங்கம் ஒரு வழிய அடச்சா, பல குறுக்கு வழிய அவங்க கண்டுபிடிப்பாங்கடா.
செந்தில்: கொஞ்சம் வௌக்கமா சொல்லுங்கண்ணே.
சவுண்டு மணி: உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. ஒரு கோடிக்கு ஐநூறு, ஆயிரம் ரூவா நோட்டுகளா வச்சிருக்கறவன் 10 பேருக்கு ஆளுக்கு 10 லட்சம் கொடுப்பான். அந்த 10 புரோக்கரும் கூலிக்கு ஆட்கள பிடிச்சி பணத்தப் பிரிச்சி கொடுப்பாங்க. சில நூறு ரூவாய்க்கு ஆசைப்பட்டு ஏழை மக்கள் பணத்த மாத்தி கொடுப்பாங்க. புரோக்கருங்க தங்களோட கமிஷன எடுத்துக்கிட்டு மீதிய பணம் வாங்குன கறுப்புப் பண மொதலாளிக்கிட்ட கொடுப்பாங்க. இதால அரசாங்கத்துக்கு என்னடா லாபம் வரப்போவுது?.
செந்தில்: அண்ணே.. தல சுத்து துண்ணே.
சவுண்டு மணி: தல சுத்தல் காணாம போக ஒரு பாட்டு பாடுவோமா. ஸ்டார்ட் மியூசிக்..
*
காசு.. பணம்.. துட்டு, மணி.. மணி..
காசு.. பணம்.. துட்டு, மணி.. மணி..
ஐநூறும் ஆயிரமும் செல்லாக் காசா போச்சுது
அம்பதுக்கும் நூறுக்கும் நாட்டு சனம் பறக்குது
பேங்கில் போட்ட காச எடுக்க
தெருத் தெருவா அலையிறேன்
ஏடிஎம்மு மெஷினு எல்லாம் ஏளனமா சிரிக்குது
பருப்பு டப்பா உள்ளே பதுக்கல் பணம் இருக்குது
கிச்சனுல சிக்கிச்சிங்க ஐநூறு, ஆயிரம்
ஹை ஹய்.. காசு.. பணம்.. துட்டு, மணி.. மணி..
கட்டுச் சோறு கட்டிக்கிட்டு பேங்குக்கு போனாக்கா
பஞ்சு மிட்டாய் கலருல தந்தான் ரெண்டு ஆயிரம்
தெருத் தெருவா அலையிறேன் சில்லறைக்கு தவிக்கிறேன்
காசு.. பணம்.. துட்டு, மணி.. மணி..
டாலராக மாத்துனவன் சந்தோசமா இருக்கிறான்
சுவிஸ் பேங்க்ல வச்சவனும் ரொம்ப சுகமா இருக்கிறான்
தலைகீழா நடக்கிறேன் சில்லறக்கி தவிக்கிறேன்
காசு.. பணம்.. துட்டு, மணி.. மணி..