முத்தம்

என் பிறந்த மேனியில்
முதல் முத்தம் தாயின் பரிசுத்தமான அன்புடன் என்னை உலகிற்கு வரவேற்றது...

என் தந்தையின் முத்தம் என் வெற்றி
புன்னகையை மிகுதியாக்கி பெருமை கொள்ள செய்தது...

என் சகோதரியின் முத்தம் அன்பை பரிசளித்து தனிமையை பொங்கியது...

உன் முத்தம் இந்த சித்திரை வெயிலையும் மார்கழி குளிராகி என்னை உறைந்து போக செய்தது...

என் மகள் எனக்களித்த முத்தம் என் பாவங்களை போக்கி என்னை கடவுளாக்கியது...

இதோ இந்த மரணம் எனக்களிக்கும்
முத்தம் என் வாழ்வின் அத்தனை முத்தங்களை நினைவு படுத்திவிட்டது.....

எழுதியவர் : சந்தோஷ் (11-Feb-18, 12:37 pm)
Tanglish : mutham
பார்வை : 107

மேலே