மாற்றங்கள்

காலத்தில் 'மாற்றம்' கண்டோம்....
மனிதரில் "மாற்றம்"கொண்டோம்...

தெவிட்டாத இன்பம் தந்து
உயிர் உரசிச் செல்லும்
தென்றல் காற்றே------
இன்று
நீ புழுதிக் காற்றாக!!!!!

ஓட்டம் எடுத்த ஓடைகள்
எல்லாம் இன்று
ஓடிய தடங்கள் தேடின.....

முகத்தில் புன்னகை
இல்லையென்றாலும்
செயலிகளில் புன்னகை
பூக்கும்!!!

எது இல்லையென்றாலும்
நிம்மதி இருந்தது!
" பணம்" கண்டவுடன்
நிம்மதி சிதைந்தது!

லட்சங்களில் புரளும்
நடிகர்கள் காண
கூடுதே கூட்டம்....

வேதனைத் தீயில்
வாடும் பாமரர்கள்-தன்னை
கண்டுகொள்ளாத
தினம் திண்டாட்டம்!!!!!

பாதுகாத்து வந்த
பாரம்பரியங்கள் எல்லாம்
பாலையில் எரியப்பட்டது.....

நம்
அடையாளம் அழிவதா?
அழிந்த பின்
மானுடர் வாழ்வதா????

எழுதியவர் : மு.பிரனேஷ் (11-Feb-18, 4:49 pm)
Tanglish : maatrangal
பார்வை : 232

மேலே