மனிதம் மக்கி போகிறது இயந்திரத்தின் மாற்றங்களில்
இதயம் உள்ள மனிதர்களை கூட
விழுந்து விட்டால் எப்படியோ போகிறார்கள்
என்று விட்டு விடுகிறோம் மனிதம் இழந்து
இணையம் உள்ள இயந்திரத்தை யதார்த்தமாய்
தவறி தரையில் விட்டால் துடைத்து பங்கு படுத்தி
உடலை மறைக்கும் சட்டை பையில் இதயம் அருகே
இடம் கொடுத்து பாதுகாப்பாய் கவனிக்கிறோம்.......
மனிதம் மக்கி போகிறது இயந்திரத்தின் மாற்றங்களில் !!!