என் தெய்வப்பெண்
ஒரு கோப்பையிலே என்
குடியிருப்பு என்று
அல்லும் பகலும்
'டாஸ்மாக்'இல் குடியிருந்த
என்னை ஒரு வழி படுத்தி
வாழ்க்கையில் நிலை நிறுத்தின
தெய்வப்பெண்ணாவள் அவள்,
அவள்தான் என் மனைவி,
இந்த காதலர் தின வாரத்தில்
அவளுக்கு நான் என்ன
பரிசு தந்திட இயலும், இயலாது;
அவள் வந்தாள்; என்னவளே இதோ பார்,
என்று என் மார்பில் 'அவள்' என்ற
அழியா பச்சைகுத்து இதயத்தின் மேல்
நான் இப்போது கூட்டியதை காட்டினேன்
அதில் அவள் முத்தமிட்டாள்
அழியா இன்பம் பெற்று இணைந்தோம்
வாழ்வில் ,'புனித வாலெண்டின் , நினைவில்
'இதயத்தில் இணைந்த காதலராய்!