இதனால்தான் சொன்னானோ பாரதி

முத்துச் சிரிப்பினள்
மோக விழியினள்
சித்திரை நிலவினள்
சித்தம் சிவனே என்றிருப்போர்க்கும்
பித்தம் தலைக்கேற்றுவாள் !
சிரித்துச் சிரித்து
மனவீதியெல்லாம் ஓடுகிறாள்
நில்லென்றால் நில்லாமல்
திரும்பித் திரும்பிப் பார்த்து ஓடுகிறாள்
ஓடி ஓடி ஓயவில்லை ; மனமோகமும் தீரவில்லை !
மோகத்தை கொன்றுவிடு இல்லையென்றால் மூச்சினை நிறுத்திவிடு என்று
இதனால்தான் சொன்னானோ பாரதி !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Feb-18, 8:45 am)
பார்வை : 79

மேலே