காதலா காதலா

மெளனத் தாரகையே நின்
விழி பேசும் ஒரு
நூறு மொழிகள் புரியாத
புரவலராய் நானிங்கு...!

அவள் இதழ் எனும்
மதுகரக் குவியலில்
மது அருந்திட அலைந்து
திரியும் வண்ணத்து
பூச்சி ஆக மாறேனோ...!

வனம் தனில் துள்ளல்
இட்டு உலவி
திரியும் அழகே உருவான
புள்ளி மானாக
அவள் வனப்பு மெளிர...!

இதனைப் பார்த்த இந்த
புரவலனும் புரியாது
அவள் விரித்தக் காதல்
எனும் வலையில்
சிக்க சிக்குண்டது நான்
மட்டும் அல்ல
எந்தன் சொல்லும் தான்....!

ஆதலால் தான் இதைக் காதல்
என்பார்கள் போலும்.......!

எழுதியவர் : விஷ்ணு (13-Feb-18, 8:47 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : kaathalaa kaathalaa
பார்வை : 97

மேலே