சத்திய சோதனை

சத்தியம் தவறிச்
சகதியில் புரளும்
மக்கள் கூட்டம்
மாண்புடன் வளர்கிறது

பொய்யை மெய்யாய்
போற்றியே வளர்த்துக்
கானல்நீரில் தாகம்
தீர்க்கத் துடிக்கிறது

பொன்னான வாக்கைப்
பொருளுக்கும், இலவசத்திற்கும்
ஆசைப்பட்டு அரசியல்வாதிகளிடம்
அடிமைசாசனம் எழுதிக்கொடுக்கிறது

அதிகாரம் கொண்டு
அடக்கியாண்டு மண்ணிண்
கனிமவளத்தையும் மணலையும் சுரண்டி விற்கப்
பேராசைப்படுகிறது

வரியை ஏய்த்து
வனப்புடன் வாழ்ந்து
சொத்தைக் குவித்து
சொகுசாய் வாழவும்...

உழைப்பவர் காசை
ஊழலாய்ச் சுரண்டிப்
பார்க்கும் சொத்தைத்
தனதாக்கிக் கொள்ளவும்..

பெண்மையைச் சீரழித்து
பெரும்பாவம் செய்து
நீதிக்கு முன்னால்
நீந்திக்கடக்க முயல்கிறது

இதைப்பார்த்து
மௌனமாய்ச் சத்தியம் நின்றாலும்
சாகாது ஒருநாளும் தர்மம்

நெருப்பில் மின்னும்
தங்கமாய்த் தன்னிலையை
வெளிக்கொணரும்...

நெருப்பில் மீண்டுவரும்
சீதையாய்...
சத்தியத்தை உரைத்துக்கூறிய கண்ணகியாய்...
சிலிர்த்து வெளிவரும்
சோதனைகளைக் கடந்து
தமிழகம்...

- சதீஷ் விவேகா

எழுதியவர் : சதீஷ் விவேகா (13-Feb-18, 3:47 pm)
Tanglish : sathiya sothanai
பார்வை : 239

மேலே