துணிவு கொள்வோம்
விழுந்து விட்டாலும்
விதையாய் முளைத்தெழுவோம்....
புகைந்து விட்டாலும்
மேகமாய் மழைப் பொழிவோம்....
உருகி விட்டாலும்
தீபமாய் ஒளிர்ந்திடுவோம்....
மண்ணாகி விட்டாலும்
பொன்னாய் ஜொலித்திடுவோம்....
மக்கி விட்டாலும்
உரமாய் உயிர்த் தருவோம்....
எதுவும் சாத்தியமே
எதற்கும் துணிந்திடுவோம்!