வா வா வா என் தேவதையே
உன் மழலை மொழியில் நான்
உருகுகிறேன்
மழையில் நனைவதாக
உணருகிறேன்
பொன்மகளே உந்தன்
புன்னகையில்
துயரங்கள் காற்றில் கறைகிறதே
அப்பாவென என்மகள்
அழைக்கையிலே
என் தாயின் உணர்வுகள்
எழுகின்றதே
என் தோளில் நீ தவழும்
பொழுதுகளில்
என் கோபங்கள் யாவும்
தனிகின்றதே
என் இதயம் துடிக்கும்
வேளைகளில்
உன் நினைவுகள்
ஒன்றே ஒலிக்கின்றதே
விளைவுகள் எதுவாய் இருப்பினும்
கண்ணே
அதை சந்திக்கும்
துணிவுகள் பிறக்கின்றதே
என் கன்னத்தில் தருகின்ற முத்தசுவரங்கள்
என் நெஞ்சத்தில் இசையென பதிகின்றதே
வானத்தின் எல்லையில்
பறக்கின்ற பரவசம்
என் செல்லத்தின் விரல்பிடித்து
நடக்கையிலே
அ.ஜீசஸ் பிரபாகரன்