மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 12

மூர்ச்சையற்ற_பொழுதுகள்_௧௨

அவனுக்குள் பரவிய காதல் நெருப்பு,சிகரெட்டை போல் தன்னை மட்டுமே சாம்பலாக்கி கொண்டிருக்கிறது என்று நினைத்தான்.
அப்போது அவனுக்கு தெரிந்திருக்க வில்லை,அந்த புகையின் தாக்கத்தால் பின்னாளில் அவளும் புற்று நோயை போல கடுமையாக பாதிக்கப்படுவாள் என்று..
எப்போதும் போல பயணங்களை அவளின் அருகிலேயே நின்று செல்வது போலவே பழக்க படுத்தி கொண்டிருந்த காரணத்தால் ,அவளை பார்த்தும் பாராமுகமாய் நகர்ந்து சென்று நடிக்க அவனால் இயலவில்லை.
முன்பு போல அவளின் மீது அவனுக்குள் இருந்த உரிமை மெலிதாய் இழந்ததை போல சற்று நம்பிக்கை தளர்ந்து போயிருந்தான்.
தனக்கு சொந்தமில்லாத பொருளை தன்னுடையது என்று உரிமை கொண்டாடும் பழக்கம் முதன்முதலில் அவள் விஷயத்தில்தான் பிரதிபலிக்க கண்டான்..
அன்று அரையாண்டு தேர்வு முடிந்து பேருந்துக்காக எல்லோரும் காத்திருந்தனர்.
மாலதியை தவிர..
எப்போதும் அவள் அருகினில் நின்றே பயணம் செய்த மனசிற்க்கு,
அவள் இல்லாத பேருந்து நிலையம் சடலங்களை பரப்பிய மயானத்தின் மத்தியில் வாழும் உலகின் கடைசி மனிதனை போல உணர்ந்தான்.
அவள் வராத பயணம் இறுதி ஊர்வலத்தின் முதல் பிரதிபலிப்பை போல் இருந்தது.
பேருந்தில் இருக்கைகள் அவளில்லாமல் வெறுமையாக கிடப்பது போல அவனுக்குள்ளும் வெறுமை சூழ்ந்து கொண்டது...
ஒவ்வொரு நிறுத்தத்திலும் முகம் தெரியாதவர்களால் பேருந்து நிரம்பி கொண்டிருந்தது.

பத்து நிமிடம் கடந்திருக்கும்,.
திடீரென பேருந்து பிரகாசமானது ,குகையிலிருந்து வெளியேறிய ரயில் போல ...
ஈர பதத்தை சுமந்து திரிந்த காற்று பேருந்துக்குள் இளைப்பாற இடமின்றி அங்குமிங்கும் அலைந்து அவனை அடைந்ததும் சாரலாய் மாறி நனைத்திருந்தது...
அவ்வளவு கூட்டத்திலும் அவளின் வாசனையை அவனின் ஆறறிவுக்குள் இருந்த ஓரறிவு கண்டுபிடித்து உற்சாக எக்காளத்தை ஓங்கி ஒலிபரப்பியது..
திடீரென தோன்றிய மின்னலின் ஒளியை கண்முன்னே கண்டதும்,கண்களை கசக்கி பார்த்து நம்ப முடியாமல் வைத்த கண் வாங்காமல் மின்னல் போன்ற அவளை நோக்கினான்.
மாலதி மேலேறி வந்ததும் கையில் வைத்திருந்த பரிட்ச்சை அட்டையை கார்த்திக்கின் கையில் திணித்தாள்...முதன்முதலாய் அவளுடைய கையால் அவளுடைய பொருளை வாங்கியதும் குழந்தையை போல தன் கைகளில் ஏந்தி மடியில் வைத்தான்..

அவளுடைய பஸ் பாஸ் பரீட்சை அட்டையில் கிளிப் என்னும் சிலுவையால் அறையப்பட்டு கிடந்தது.அது கருப்பு வெள்ளை கலந்த கிளியோபாட்ரா புகைபடத்தை நினைவு படுத்தி விட்டு சென்றது.
மிகவும் அழகாய் அவன் கைகளுக்கு மிக அருகில் தேவதையை போல் நின்றாள்..
அவள் தன்னை மீண்டும் பார்க்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு,
விரல்கள் நடுங்க மெதுவாய் அவளின் முகத்தை வருட முன்னேறியது.
நெஞ்சின் படபடப்பால் அவனின் இடது பக்கம் புதிதாய் ஏதோ எடை அதிகரிப்பது போல் உணர்கிறான்..காரணம் அவள் அவனுடைய செய்கையை பார்த்து விட்டாள்..
திக்கென்று இருந்தது அவனுக்குள்.
ஈரகுலைகள் பதட்டத்தில் உடலை விட்டு வெளியேறி பதுங்க முயற்சித்தது.

பஸ் பாஸில் இருந்த அவளின் முகத்தை நோக்கி சென்ற விரல்களில் அவளின் பொன் விரல்களால் ஓங்கி அடித்தாள்..வலிப்பதுபோல கைகளை உதறி விட்டு அவளை பார்த்தான்..
என்ன பண்ணுற என்றாள்...
இல்ல முகத்துல தூசி இருந்துச்சு அதான் தட்டி விட என்று இழுத்தான்..
ஹா ஹா அது தூசி இல்ல காலைல போட்டு பவுடர் என்றாள்..
அப்போ இந்தா பாரு கருப்பு கலர்ல எதோ தெரியுது என்றான்..
அது கண்மை என்றாள்..
அவனுக்கு புரிந்தது அவ நம்மளை கலாய்க்கிறாள் என்று..
இப்போ பாரு என்று அவள் போட்டோவை நெஞ்சோடு அணைத்தான்.அவள் முகத்தில் கொஞ்சம் கோபம் எட்டி பார்த்தது ..அட்டையை பிடுங்கி தலையில் ரெண்டு அடி அடித்து விட்டு தன் மார்போடு அதை அணைத்து கொண்டாள்...

இறங்கும் இடம் வந்ததும் எல்லோரும் இறங்கினார்கள்...
கூட்டத்தில் பின்னாலிருந்து ஹாய் கார்த்திக் என்ற அழகிய குரல் கேட்டு திரும்பினான்..
பர்ஹானா நின்றுகொண்டிருந்தாள்...
மாலதி கூட படிக்கிறாள் ..அவ்ளோ ஆஹ் பேசினது இல்லை ..எதற்காக கூப்பிடுகிறாள் என்ற குழப்பத்தோடு ஏறிட்டு பார்த்தான்..

உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லி விட்டு அவனை பார்த்தாள்..
நான் மாலதி கூடத்தான் படிக்கேன்..நீ அவளை லவ் பண்ணுறன்னு நினைக்கேன்..
சோ உனக்கு ஹெல்ப் பண்ணலாம் னு நினைக்கேன் என்றாள் ...
எனக்கு எதுக்கு வான்டேட் ஆஹ் வந்து இப்படி சொல்லுறா என்று உள்ளுக்குள் நினைக்கவும்
நான் உங்க ப்ரெண்ட் ஆஹ் லவ் பண்ணுறேன் ..பட் அதை அவனிடம் சொல்ல தயக்கமா இருக்கு...அவன் ரொம்ப ஷய் டைப் ..நான் சொல்லி அத புரிஞ்சுக்காமலோ இல்ல காதலும் பிடிக்காது கத்தரிக்காகவும் பிடிக்காதுன்னு என்னை ஏதும் ஹர்ட் பண்ணிட்டா மனசு தாங்காது ..சோ நீதான் டைம் பார்த்து அவனிடம் சொல்லணும் என்றாள்..

நீ யாரை லவ் பண்ணுற சரவணனையா என்றான் கார்த்திக்..
ஐயோ அந்த அண்ணாவை இல்லை சலீம் ஆஹ் ...
அய்யயோ அவன் என்கிட்டே மட்டும்தான் ஜாலி ஆஹ் பேசுவான்..மத்தவங்க கிட்ட பேசுறதுக்கு ரொம்ப கூச்ச படுவான் ..அதுவும் பொண்ணுங்ககிட்டண்ணா சொல்லவே வேணாம்...அதுலாம் ரொம்ப கஷ்டம் மா என்றான்...
ப்ளீஸ் நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுனா உங்க லவ் கு நானும் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுறேன் என்றாள்...
ம்ம் இந்த டீலிங் கூட நல்லா இருக்கே என ஓகே சொன்னான்...
ஒருவேளை ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால் தன் காதல் தானாக வளரும் னு பெரியவங்க சொன்னது இதைத்தானோ என்று எண்ணிக்கொண்டு திரும்பி பார்த்தான் ...

மாலதி இவர்கள் இரண்டு பேரையும் பார்த்து கொண்டு தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்..
கார்த்திக் அவளை பார்த்ததும் விருட்டென நடக்க தொடங்கினாள் எதிர் திசையை நோக்கி..

யாரிடம் யார் முதல் காதலை சொன்னது..
யார் காதல் முதலில் கை கூடியது ...
இன்னும் இந்த காதல் எதையெல்லாம் கடந்து போகுமோ..
மாலதியின் பார்வை காதலா இல்லை கானலா

இந்த கேள்விகளையெல்லாம் சுமந்து கொண்டு அடுத்த பேருந்து பயணத்தை எதிர் பார்த்து காத்திருங்கள் ..

தொ_ட_ரு_ம்

எழுதியவர் : சையது சேக் (13-Feb-18, 5:43 pm)
பார்வை : 183

மேலே