உலகக்காதல்

இந்த உலகம் 
சரியான உருவத்தில்  இல்லாதபோது 
அழகான உருவம் உறவாக்கித்தந்தது  காதல் 

இந்தஉலகம்ஆநாகரீகத்தில் 
அழிந்துக்கொண்டிருந்தபோது 
அறிவான நாகரிகத்தை கற்றுத்தந்து காதல் 

இந்த உலகம் 
இதழ் மொழிகளால் 
வேறுப்பட்டிருந்தபோது
இதயம் பேசும் பொது மொழியை ஒலிக்கச்செய்தது காதல் 

இந்த உலகம் 
சுயத்தேவைக்கு மிருகமாய் மாறிக்கொண்டிருந்தபோது 
மனிதமென்னும் மாவிருந்தை அள்ளிக்கொடுத்தது காதல் 

இந்த உலகம் 
மத்தாலும் சாதியாலும் 
மேலும் பல ஏற்றத்தாழ்வாலும் பிரிந்துக்கொண்டிருந்தபோது  
அன்பு மழையை வீசி அரவணைத்துக்கொண்டது காதல் 

இந்த உலகமே காதல்
இந்த காதலே 
இந்த உலகம் !

எழுதியவர் : சூரியன்வேதா (14-Feb-18, 10:42 am)
பார்வை : 64

மேலே