செல்களின் யுத்தம் 14 கீழ் 14 --- முஹம்மத் ஸர்பான்

ஊமையின் மொழி போல
மெளனங்கள் கூட பாஷை
ஆமையின் நகர்வு போல
நினைவுகள் ஒரு காளான்
பாலைவனப் புழுதி போல
காயப்பட்ட ஆன்மா நான்
வயது போன கல்லறைகள்
கையளவு இதயங்கள் தான்
அங்கே மூடப்பட்ட வானம்
ஜென்மங்கள் வாழும் வீடு
இங்கே சுவாசிக்கும் இதயம்
மரணங்கள் கடத்தும் கூடு
பாழடைந்த மயானச் சந்தை
கவிஞர்களின் மாய உலகம்
மாலுமியின் சுவாசப் பந்தை
காதல் முள் குத்தும் கலகம்
இராணுவவீரனின் மடல்கள்
இறந்த பின் நீளமான ஏக்கம்
செதில் சட்டைக்காரன் கடல்
மறந்த தோடு பற்றிய துக்கம்
இருளில் அணைந்த தீபங்கள்
மழையில் நனைந்த நாட்கள்
பாதத்தை துளைத்த முட்கள்
என்னிடம் மன்னிப்பு கேட்கும்
தேவதை வாழ்கின்ற நூலகம்
எனக்கு மட்டும் உயிரின் மனு
வேதனை நிறைகின்ற இதயம்
விதிகள் மேல் போட்ட வழக்கு
செல்களின் யுத்தம் 14 கீழ் 14