மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 13

மூர்ச்சையற்ற பொழுதுகள் ௧௩

இருவரையும் பார்த்துவிட்டு சென்றவளை நோக்கி பின்னால் ஓடினான் கார்த்திக் ..
அவள் பாத சுவடுகளை பின் தொடர்ந்து அவனது பார்வைகள் எட்டும் தூரம் பின் தொடர்ந்தான்.. அதற்குள் அவள் அவளின் வீட்டை அடைந்திருந்தாள்.
முடிவில் இன்றுதான் தெரிந்த்தது அவளின் வீடு எதுவென்று..
மணமகனாய் போவேன் என்று நினைத்திருந்தான், கண்மூடித்தனமான காதலால் அதே வீட்டிற்குள் மனம் ரணமாகி போக வேண்டிய சூழ்நிலையில் சிக்குவேன் என்று அறியாமல் இருந்து விட்டான்..
ஆறு மாதங்களாய் அவளை தவிர அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை,
அவளின் பிம்பத்தை கடந்து எதுவுமே யோசிக்காதபடி காதல் என்ற மாயைக்குள் முகம் குப்புற வீழ்ந்து கிடந்திருக்கிறேன் என்பதை இன்றுதான் உணர்ந்தான்

நேசிப்பது எளிதாகவே இருந்தது.
அந்த உணர்வை அவளிடம் சொல்லுவதுதான் நினைத்ததை விட மிகவும் கஷ்டமாக இருந்தது.
காதல் பூத்த தருணங்கள் உருண்டோடி காதலர் தினத்தை அடைந்திருந்தது.
அன்பினை வெளிப்படுத்த இந்நாள் மிகவும் சரியானதாய் இருக்கும் என்று எல்லோரையும் போல அவனுக்கும் தோன்றியது.
என்னவெல்லாம் பேச வேண்டும் என்று இரவு முழுவதும் ரிகர்சல் பார்த்து கொண்டான்..
முதன் முதலாய் காதலை சொல்ல போகிறேன் என்பது ஒருபுறம்,என் விருப்பத்தை சொன்னால் ஏற்று கொள்வாளா இல்லை ஏற்காமல் கொல்வாளா என்ற பரிதவிப்பு மறுபுறம் என்ற இருத்தலைகொள்ளி எறும்பு போல தவித்தான்...

அதிகாலை சூரியனை அவனே அலாரம் வைத்து உசுப்பி விட்டான்..
குளிர் கடுமையாக இருந்தது என்பதை அதிசீக்கிரமாய் குளிக்கும் போது உணர்ந்தான்..
ஏற்கனவே இருந்த படபடப்பிற்க்கு குளிரும் சேர்ந்து வலுவூட்ட,
முகமெல்லாம் வெளறி போயிருந்தது...
எப்போதும் பயணிக்கும் பேருந்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான்.
அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் குறிப்பிட்ட பேருந்தில் ஏறினான்..
அவளை காணவில்லை ..பர்ஹானா அவனை பார்த்ததும் ஹை என மெதுவாக நெஞ்சு வரை கை உயர்த்தினாள்..
மாலதி அவ வீட்டு முன்னாடி உள்ள ஸ்டாப் ல நிக்கேன்னு சொல்லிருக்கா என்று மெதுவான குரலில் கிசுகிசுத்தாள் ...
தேங்க்ஸ் என சொல்லிவிட்டு அவள் நிற்கும் இடத்தை நோக்கி நகர்ந்தான்..
ஜன்னல் வழியாக சில மீட்டர் தூரம் வீடுகள் ஒன்றோடு ஒன்று போட்டி இட்டு வளர்ந்திருந்தது..அவள் வீடு பக்கத்தில் இருக்கிறதை சுவரில் பூசப்பட்டஜவுளிக்கடை விளம்பரம் சொல்லாமல் சொல்லியது...
தூரத்தில் அவள் மட்டும் நிற்பதை அறிந்து உள்ளம் சிலிர்த்து கொண்டது.
அருகில் வர வர உள்ளமெல்லாம் சந்தோஷமும் பயமும் ஒன்றோடு ஒன்றாய் பின்னி பிணைந்து சண்டை இட்டு கொண்டது..
கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து அவளின் நிறுத்தத்தை கடந்து நிறுத்தாமலே போய் கொண்டிருந்தது.
சொல்ல முடியாத ஏக்கத்துடன் அவளை பார்த்து கொண்டே நின்றான் ...
பின்னோக்கி தூரமாய் ஒரு புள்ளியாய் கரைந்து கொண்டிருந்தாள்..
மனனம் செய்த கவிதை வரிகளும்,காதல் வார்த்தைகளும் அவளை போலவே மனசிலிருந்து கரைந்து காலாவதியாகி கொண்டிருந்தது..
பஸ்ஸில் இருந்து குதித்து விடலாமா என்று மனம் கதறியது ...
கையில் வைத்திருந்த வாலன்டின் வாழ்த்து அட்டையும் அதிலுள்ள கவிதையும் அவனை பார்த்து ஏளனமாய் சிரித்தது...

ம்ம் என்று செருமிக்கொண்டே கார்த்திக்கின் கவனத்தை உடைத்து அவனை திரும்பி பார்க்க வைத்தாள்...
நான் வேணும்னா அந்த லெட்டர் ஆஹ் அவளிடம் கொடுக்கட்டுமா,அவ எப்படியும் அடுத்த பஸ்சில்தான் லேட்டா ஆஹ் வருவாள் ..
ம்ம் என்ன சொல்லு ..வேணம்னா நீயே கொடுத்துக்கோ பட் ஈவினிங் தான் கொடுக்க முடியும் சப்போஸ் அப்பவும் கொடுக்க முடியலைன்னா இனி அடுத்த வருஷம்தான் இந்த நாள் வரும் எப்படி வசதி என கேட்டு அவன் மனதை கொஞ்ச கொஞ்சமாய் மாற்றினாள்...

சரி கண்டிப்பா கொடுத்திருவியா,அப்படியே அவள் என்ன ரியாக்ட் பண்ணுறான்னு பார்த்து சொல்லுவியா ப்ளீஸ் என கெஞ்சினான்..
ஓகே கண்டிப்பா சொல்லுறேன் என அதை வாங்கி கொண்டு நகர்ந்தாள் பர்ஹானா ..
இருளில் தடுமாறி விழுந்து காயப்பட்ட வேளைகளில் பார்வையற்ற ஒருத்தி எனக்கு உதவ வந்ததை போல உணர்ந்தான்...
அவள் அவளை நேசிப்பதை விட அதிகமாய் அவன் அவளை நேசித்தான்..
ஆனாலும் அவள் அவள்தான் ( A rose is a rose) என்பதை உணர்த்தும் தருணம் கால சக்கரம் கால்கள் இல்லாமலேயே உருண்டோடி வந்து கொண்டிருந்தது..

மதியம் உணவு இடைவேளை;
என்னடி சாப்பாடு கொண்டு வந்திருக்க இன்னைக்கு ஏதும் ஸ்பெஷல் ஆஹ் என்றவாறு பர்ஹானா மாலதி அருகே வந்தாள்..
இல்லடி வெறும் சாம்பார் சாதம் தான் ..என்னைக்கும் இல்லாம என்ன திடிர்னு என்ன ஸ்பெஷல் னு கேட்குற என்றாள் மாலதி..
இல்லடி இன்னைக்கு வாலன்டின்ஸ் டே சோ ஏதும் சம்திங் இருக்கும்னு நினைச்சேன்..
போடி இதுக்குமா வீட்டுல ஸ்பெஷல் ஆஹ் சமைச்சு கொடுப்பாங்க என சிரித்தாள் மாலதி..

ஓகே இப்போ ஒரு ஸ்பெஷல் சர்பரைஸ் இருக்கு பக்குறியா என்று பர்ஹானா டுவிஸ்ட் வைத்தாள்..

ம்ம் சொல்லு என்னனு பார்த்துட்டு அது சர்பரைஸ் ஆஹ் இல்ல சாதா ரைசானு சொல்லுறேன் என கிண்டலடித்தாள்...

கண்ணை மூடு கைல தரேன் என்று சொல்லவும்,
ம்ம் போதுமா சீக்கிரம் கொடுடி என அவசர படுத்தினாள் மாலதி..

கார்த்திக் கொடுத்த வாழ்த்து மடலை அவள் கையில் வைத்தாள் பர்ஹானா..
கண் திறந்து பார்த்தாள் ப்ளூ கலர் கவர் கையில் இருந்தது ..கவரின் இரு புறமும் பார்த்தாள் பெயரும் முகவரியும் இல்லை..
யாருடையதுடி உனக்கு வந்துச்சா என்று குழப்பத்தில் கேட்டாள்..

ம்கூம் எனக்குலாம் இல்லப்பா நீயே பிரிச்சு படிச்சு பாரு என்று நழுவினாள்...
மாலதி மனசு படபடப்போடு மெதுவாய் மடலை திறந்து பார்த்தாள்,,,


மலரே ...
நீ பிறக்கவில்லை என்றால்
பூக்களையும் இறைவன் படைத்திருக்க மாட்டான்..
உன் பிறந்த நாளை முன்னிட்டு
சூரியனிலும் மர நடு விழா நடத்த ஆசை.
நீதான் என் எட்டாவது அதிசயம்,
ஏனெனில் நீ அதிசயங்களையும் அதிசய பட வைக்கிறாய்..
அழகான நூறு பெயரை பட்டியலிட சொன்னால்,
அதில் நூறு தடவையும் உன் பெயரைதான் எழுதுவேன்..
நீ அழகு என்று பொய் சொல்லவும் தோன்றுகிறது,
நீ மட்டும்தான் அழகு என்ற உண்மையையும் சொல்ல தோன்றுகிறது..
உனக்கு அழகிய பரிசு கொடுக்க நினைத்தேன்.
உன்னை தவிர அழகாகக் எதுவும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை ..
இறைவன் அழகானவற்றை படைக்க நினைத்தால்,
மீண்டும் உன்னைதான் படைப்பான்..
அழகுகான இலக்கணம் உன்னிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
அது உன்னை விட்டு பிரியாமலும் தொடர்கிறது..
கண்ணாடியும் தன் முகத்தை பார்த்து கொண்டது,
நீ எதிரில் நிற்கும் போது..
நாகரீகத்தின் பிறப்பிடம் சிந்து சமவெளியாம்,
அவர்களுக்கு தெரியாது
நீ நாகரீகத்தின் முன்னோடி என்று ...
ஏழு அதிசயங்களையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமா,
உன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொள்..
காதலையும் உன்னையும் பிரித்து பார்க்கவில்லை ..
என பிரியங்கள் எப்போதும் உன்னையே சுற்றி காதல் கொள்வதால்..

உனக்கு என்னை தெரியும் ஆனால் எனக்கோ உன்னை மட்டும்தான் தெரிகிறது..
உன் அழகு சதைகள் வழக்கொழிந்து போன பின்பும் என காதல் வழக்கொழிவது இல்லை..
உன்னையே சதா நினைத்து வாழ்கிறேன்..
உன்னிடம் சொல்லாத காதல் சாதாரணமாய் தெரியலாம் ..
அதை சொல்ல முடியாமல் நான் படும் அவஸ்தை சதா ரணமாக இருக்கிறது ...
உன்னுடன் வாழவும் உன்னுடன் சாகவும் இந்த ஜென்மத்தில் இடம் கொடுப்பாயா ...

happy valentine's day malathi ..
by karthik

வாழ்த்து அட்டையை மூடிவிட்டு பர்ஹானாவின் முகத்தை பார்த்தாள் மாலதி..

காதலும் காதல் நிமித்தமும் தொடரும்..

எழுதியவர் : சையது சேக் (14-Feb-18, 2:33 pm)
பார்வை : 254

மேலே