பூக்களின் வாழ்க்கை

பூக்கள்
எல்லாம் சாதனையாளர்கள்
புன்னகையின்
மறு உருவம்
சதா சிரித்துக்கொண்டே
இருப்பதும்
ஒரு உலகசாதனை தானே...?

பூக்கள்
அதிபுத்திசாலிகள்
இடம் விட்டு
இடம் பெயராமலே
காற்றையும் வண்டையும்
தூதுவர்களாக்கி
தன் இனத்தை பெருக்கி
கொள்ளும் வல்லமை
படைத்தவை

பூக்கள்
மங்கையர்களை
மயக்கி தன்வசம்
இழுக்கும் வசியகாரியா
அல்ல மன்மதன்
வம்சாவளியா..?
மங்கையரின் தலையில்
அமர்ந்து வாசம் வீசினாலும்
தலைகணம் இல்லாத
அடக்கத்தின்
இன்னொரு பக்கம்

பூக்கள்
சூழ்நிலை புரியாத
முட்டாள்கள்
என நினைக்கிறேன்
இழவு வீட்டிலும்
சிரித்துக்கொண்டே
இருக்கிறதே...

பூக்கள்
காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
தன்மையிலும்
மலர்ந்து புன்னகை
வீசிக்கொண்டே இருக்கும்
நம்பிக்கை நட்சத்திரம்...

மனிதர்களை போல
பூக்களிலும்
ஆண் பெண் அலி
என பூக்கள் உண்டு
சாதிகளும் உண்டு
சாதிமல்லி இதற்கு
ஓரு சான்று...

பூக்களின்
ஆசீர்வாதத்தை
பாருங்கள்
ஒரே தோட்டத்தில்
மலர்ந்த பூக்கள்
சில ஆண்டவனுக்கு
அர்ச்சனை பூக்களாகவும்
சில கல்யாண பூக்களாகவும்
சில இறுதி ஊர்வல பூக்களாகவும்
தன் வாழ்க்கையை
முடிக்கின்றன

மனிதன் இறந்தால்
பூக்களால் அலங்கரிக்கபட்ட
இறுதி ஊர்வலம்
பூக்களே இறந்துவிட்டால்
யார் செய்வது
அவைகளுக்கு இறுதி ஊர்வலம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (14-Feb-18, 11:12 pm)
Tanglish : pookalin vaazhkkai
பார்வை : 4856

மேலே