ரகசிய விழியல்

கதிரவன் சுட்டகருவாடு
தின்கிறது மூளிநாய்,
காதோரம் சிகை ஒதுக்கி உதட்டுக்குச்சாயம் பூச்சுகிறாள் விலைமாது,

ஊட்டம் தேடுகிறது
ஈக்கொடுக்கு,
ஈகை நாடுகிறான் யாசகன்,

ரேகைத்தினவில் களவுகாக்கிறான் கள்வன்,
குத்திக்கிழித்தவுடன் ஆனந்த நிம்மதியடைகிறான் கசாப்பங்காடிக்காரன்,

பலூனில் அழகாய்த்
தெளிக்கப்படுகிறது ரவை, ஆயுதப்பூசைக்குத் தலைநீராடல்
செய்து கொள்கிறது
சம்பட்டியும் மம்பட்டியும்,

அசரீரியுடன் உரையாடுகிறது
மதலை,
அடுத்த இரை நோக்குகிறது முதலை, மாதிடுப்பை போல் வளைவு ஆடி சிரிக்கிறது
பஞ்சாரத்திருவிளக்கு,

கானம் துதிக்கிறது
காலக்கைக்கிளை மனம்,
தியானம் சொல்கிறது உன்மதி,
ஆனால்,
வைகறைக் கூவுகிறது ராக்கோழி;
உன் விழியல் ர(க)சியத்தில்.

எழுதியவர் : சக்தி கேஷ். (15-Feb-18, 1:23 am)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 103

மேலே