நானறிந்த புத்தன்

நீ யார் என்பதை
உணர்ந்து கொண்டாயெனில்
உன்னுள்ளே இருந்து
உன்னை ஆட்டுவிப்பனை
அறிந்துவிட்டாயாகும் -அந்நிலையில்
நீ 'புத்தனாகிவிட்டாய்', இது சொல்வது
மிக சுலபம் , புத்தியால் மனிதன்
இந்நிலை எய்தல் , கோடான கோடி
மனிதரில் யாரோ ஒருவர்
இப்படி பல 'புத்தர்கள்' யுகங்களில்
வந்து மனிதருள் ஒருவராய் இருந்து
வாழ்ந்து மறைகின்றனர் -ஒவ்வொரு
இவ்வாறு வந்து மறைந்த மனிதர்
கடவுளின் 'அவதாரம்', அவர் எம்மதத்தவர்
ஆயினும் -பூகோளத்தால் இம்மகான்கள்
போதனை 'வேறு மதம்' என்று மாறி இருப்பினும்
இவர்கள் 'போதனைகள்' எல்லாருக்கும் பொதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Feb-18, 8:33 am)
Tanglish : naanarintha butthan
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே