யாரழகு
பெண்டிர்காள் அழகில்
உயர் சொன்னால்
பெருமகிழ்வு தின்னும் பேரினமே!
மறுமொழி சொல்வேன்
ஒருநிமிடம்-மனதில்
வெளி இருந்தால்
சற்று கேளீரோ!
தொகை அழகு குறைவுசொல்லி
தோகை எனப் பெயர்திருடி
நகைபோல் அணியும்
நங்கையர் நளியும்
நகைச்சுவை உலகமடா!
பிடரியில் பேன்குத்தி
இடரியில் ஈர்க்குத்தி
மச்சக்களத்திலும்
மைதுனக்களத்திலும்
துச்சமாய் ஆடவன்
மிச்சமாய் அழகுக் குவித்து
மிடுக்காட்டும் மின்னியோள்!
அழுக்கனின் அறத்தழகில்
அரைப்படியும் - வண்ண
கருப்பனின் காலழகில்
காற்பிடியும் -கூட
அழகு இல்லை எனஎந்தன் சுதி-
சொல்லத்
தொல்லையெனத் தேர்பிடிக்கும்
முல்லை மலர்த் தேவியரே!
வந்தவினை சொந்தவினை
வழக்கேறும் விந்தைவினை
இந்தவினை எந்தன்வினை- கொஞ்சம் ஈடிணைக்க நொந்தவினை!
பெண்டிர்க்கொரு துடுக்கு
சொன்னால்
நொன்டிநோண்டும் நோக்கத்திரே! நானும்கூட ஆடவன்தான்
நன்மைபக்கத் தேடலன்தான்!
பேதைக்கொரு பிழையென்றால் பிளிர்ந்துவரும் - அறப்பெண்மை பேசும்
மாதர்வாதியரே
நானுங்கூட உன்னிணந்தான் நாளைக்கொரு சீட்டுகொடு!
பெண்மைக்கு சுளுக்குவரும்
பேரிருளாய் இழுக்கு வரும்
அப்பொழுதும் உம்முடனே
அறத்தழுவம் சிரித்தெழுவோம்!
மிகைபொருளாய் மிடுக்கூன்றி
இறைபொருளும் இலவசமாய்
எக்கச்சக சலுகரனை - இருந்தும்
எட்டிப்புலம்பும் இழுகரனை!
மந்தைக்கும் சந்தைக்கும்
விந்தையாய் வீருநடை - புரட்ட
சந்தனக் கூழெடுத்து
சருமத்திலே பூசுவதுதா னெங்கே?
ஏர்பிடித்த பாணியிலே - சிகை
சீர்பிடிக்க மறந்த மூடன்
கடலை எண்ணெய்
கட்டித்தயிர்போல்
கருத்து மிளிரும்
கடுத்தமயிர்மேல்!
பிட்டைப்பிடித்தக் கென்டைக்கால்
சொட்டைசொட்டையாய்
கழுவும்போது
மிச்சமாய் இருக்கும் சேர்வழித்த - மீசை முறுக்கையில் முறுக்கேறி
நிக்குமடி முத்தழகு!
அழகெல்லாம் வெறும் மாயமடி அகத்தறமே அழகென ஆணியடி முகத்தழகென அவன்
முந்திவிட்டால்
உனைக்கூறுகட்டும் -கேடு
நூறுகட்டும்.
தேகத்திலே எந்தத் தேற்றமுமே தேய்மைதரும் விந்தைத்
தோற்றமடி
பிறப்பின் முற்றலிலே - பெறும் சொற்றலிலே -அழகுச்
சதைகளெல்லாம்
மெல்லச்சிதையுமடி!
ஆறு அடி கொள்ளும்
நாற்றமடி - வெறும்
அழகின் நுண்ணியம்
சீற்றமடி!
அழகி லாடவன் அதகளித்த
உடன்தான் சீட்டெடுக்குமோ
பெண்மைக் காதல் கிளி!
பித்தவினை பீற்றிக் கொள்ளும் மாந்தரெலாம் - உனை
மொத்தபிடி போட
பல வலைவிரிப்பர்
வாயினிலே வலைகடிக்கும்
மீனைப் போலே - துணிவறத்
தினில ஏணிகட்டி ஏறிமிதி!
பெண்ணழகில் ஆணழகு
மீட்சியடி
ஆண் உணரும் பெண்மை
யொன்றே சாட்சியடி
அனைவருமே அழ கதனைத்
தேடிச் சென்றால்
மெய் யழகு எலாம்
பொய்யி ளிக்குமடி!
ஆணழகும் பெண்ணழகும்
ஓரழகே - இது
ஆதிகள் கிள்ளிய கீரையடி
ஆயிர மாயிரம் அறம்வீசி
நீ ஆனந்தமா
யொருக் கும்மியடி!
-