கூவிக்கொடு தப்பில்லை

வீதியில் சொன்னாலோ
வெட்கம் சிலருக்கு
கழிப்பறையில் காகிதம் பதித்தால்
கலங்கம் பலருக்கு

எங்குதான் சொல்வதென்று
எண்ணிச் சொன்னால்
அசிங்கமடா 'அட ச்சீ'
என்ற சிலர்

தனக்கிருந்த பலத்தின்
உச்சத்தை
அவனோ அவளோ
வரும்போதெல்லாம்
தன்மீதுத் தானே
திணித்துக் கொண்டனர்

வடிதேனீர் கேட்கும்
அவனுக்கோ
ஆறு பிள்ளே
வடிச்சிக் கொட்டும்
அவளோ
அழுதது உள்ளே

தேனீருக்கு வடி கேட்டவன்
தேகத்திற்கு
வடிதந்தால்
சிரிக்கிறான்
'சீச்சி' என்கிறான்.

ஆவியில் வேகமாய் வெந்த
வெண்வட்டக் கட்டிகளைத்
தந்தத்
துணிக்குக் கூட
இங்கு
தினமிரண்டு குளியல்.

ஆனால்
ஆட்களைச் சிதைத்தெறியும்
அமரராக்கிச் சீக்கைக் கொள்ளும்
அந்தப் பொம்மைப்பொருள் மட்டும்
ஏனோ ஆகவில்லை
ஏளனமாய் எல்லோர்க்கும்,

பொய்யாவே இத்தனை நாள்
பூட்டிவெச்ச அசிங்கமெல்லாம்
மாற்றமெனும்
மாடுதின்னப்
புல்லுக்கட்டா ஆயிடுச்சு,

அசிங்கமெனப் புறக்கணித்த
அவர்களையோ
வருமவலம்
அறியாதவராய் அறிகிறேன்
ஆதலால்,

சீக்கை ஒழித்து
சீமை காக்க
சீக்கிரமாய்ப் போ
'சீச்சீ'னு சொல்லாமல்
சிரிப்புடன்
'போச்சி'னு சொல்லிடு!

கீழ்த்தெரு மருந்தகத்தில்
மேல்த்தெரு மாடசாமி
வாங்கிட்டும் போயிட்டான்
வல்லவனாய் ஆயிட்டான்,

இனி
தெளிவாய் இருந்திடுவாய்
தேகம் காத்திடுவாய்
தெரியாத மாந்தர்க்கெல்லாம்
தெரிய வைத்திடுவாய்,

கேலி செய்தோரெலாம்
கேட்பார் ஒருநாள்
ஊரேக் கேட்கும்
'உறை'யென ஒருநாள்,

கூவிக் கொடு
தப்பில்லை
குறைகளினி
உனக்கில்லை.

எழுதியவர் : சக்தி கேஷ். (15-Feb-18, 2:11 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 73

மேலே